Ads (728x90)

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். கந்தர்மடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, கட்சி ஆதரவாளர்களால் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை யாழ். ஊடக மையத்தினரால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget