இதன்படி 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61% வளர்ச்சியாகும்.
அத்துடன் 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானது. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.57% வருடாந்திர வளர்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வளர்ச்சி இலங்கை உலக வர்த்தகத்தில் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பையும், சந்தை வாய்ப்புகளை பன்முகப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும் அதன் முயற்சிகளின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது.
ஓகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன் முதல் எட்டு மாதங்களில் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment