வீதியை மறித்து நூற்றுக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை கிளைகளில் நிலவிய ஊழியர் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரமே பயனர்களுக்கு வழங்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மின்சார சபை ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சலுகை மற்றும் கொடுப்பனவை மீள வழங்குமாறு இலங்கை மின்சார சபை அனைத்து தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.
இதனால் காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன் சில மணிநேரத்துக்கு போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், போக்குவரத்தை சீர் செய்வதற்காகவும் பெருமளவான பொலிஸாரும், இராணுவத்தினரும் போராட்டக்களத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment