போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில், மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக சூப்பர் ஓவரில் இலங்கை அணி 02 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இந்திய அணி 03 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிப் பெற்றது.

Post a Comment