சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா அழைப்பின் பேரில் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.
தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர்.இதனை தொடர்ந்து இங்கு உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
குறிப்பாக பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக நாம் அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எந்தவொரு நாடும் இதுவரையிலும் பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை. அதற்கான நமது எதிர்காலப் பயணத்திற்கு இந்தக் கூட்டு முயற்சிகள் மிகவும் அவசியமானதாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

.jpg)

Post a Comment