இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.
இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Post a Comment