ஆரம்ப சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான முறையில் வயோதிபத்தை அடைதல் மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுதல் ஆகியவை இந்த பிராந்தியக் குழு அமர்வில் பிராந்திய சுகாதாரத் தலைவர்களால் கலந்துரையாடப்படும் விடயங்களில் முக்கியமானதாகும்.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதனொம் கேப்ரியஸஸ், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் கேத்தரினா போஹ்மே உட்பட எட்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்நாட்டு சுகாதார அமைச்சர்கள், இரண்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் பிற நிபுணர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த மாநாடு நடைபெறுவதுடன், அவர்களினால் எதிர்வரும் ஆண்டுக்கான பிராந்தியத்தின் சுகாதார நிகழ்ச்சி நிரலும் இங்கு தயாரிப்படவுள்ளது.இந்த பிராந்திய மாநாட்டில் முக்கிய சுகாதார பிரச்சினைகள் தொடர்பான பரிந்துரைகள் அங்கீகரிக்கப்படுவதுடன், முந்தைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றமும் பரிசீலிக்கப்படுகிறது. அனைத்து மக்களின் சுகாதாரத்தையும் நலனையும் மேம்படுத்துவது, வழங்குவது மற்றும் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, சுகாதாரத்துடன் தொடர்புடைய நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மீண்டும் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் இம்மாநாட்டில் புதுப்பிக்கப்படவுள்ளன.



Post a Comment