பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை ஆரம்பித்து வைத்தார்.
டிஜிட்டல் மயமாக்கலை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணங்கள் மட்டுமின்றி, அபராதத்தையும் GovPay மூலம் செலுத்துவதன் ஊடாக கால வீணடிப்பு குறைக்கப்படுகின்றது.
பொலிஸாரின் சேவையையும் இது இலகுபடுத்தும். மக்களுக்கும் நேர வீணடிப்பு ஏற்படாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்தார்.
GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் நடைமுறை மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவதாக தற்போது வடக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு சில பொலிஸாரின் தவறான நடவடிக்கையால் ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் களங்கம் ஏற்படும் நிலை காணப்பட்டது. நவீன முறைமை என்பது வெளிப்படைத்தன்மையானது. எனவே பொலிஸார் மீதான விமர்சனங்களுக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இன்றைய நவீன உலகில் நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நாமும் நகரவேண்டும். அப்போதுதான் உலகை வென்று முன்நோக்கிச் செல்ல முடியும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பொறுப்பை எமது ஊடக தோழர்கள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


Post a Comment