Ads (728x90)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தென் ஆபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் 3 தடவைகள் தடைப்பட்ட போதிலும் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் தென் ஆபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கெதிரான இப்போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணி அவர்களுக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் போட்டியின் இடைநடுவே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி 40 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கமைய தென்னாபிரிக்க மகளிர் அணி 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் மழையின் குறுக்கீடு காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் மகளிர் அணிக்கு 20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்   தலா 9 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget