Ads (728x90)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, இஸ்ரேல் காசாவின் சில பகுதிகளிலிருந்து படைகளை பின்வாங்கத் தொடங்கியுள்ளது. 

ஹமாஸ் 72 மணி நேரத்திற்குள் 20 உயிருடன் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், 28 இறந்தவர்களின் உடல்களையும் விடுவிக்க உள்ளது. 

இதற்கு பதிலாக, இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை பெற்ற பாலஸ்தீனியர்கள் உட்பட 1,700 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்கிறது. 

மேலும் ரஃபா எல்லைச் சோதனை நிலையம் திறக்கப்பட்டு, காசாவுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட உள்ளன. 

டிரம்பின் 20 புள்ளி திட்டத்தின் முதல் கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. ஈஜிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகியவற்றின் உதவியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளன. 


Post a Comment

Recent News

Recent Posts Widget