Ads (728x90)

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல்.சந்திரலால் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, 6.8 சதவீதத்தினால் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது.

இது தொடர்பாக சம்பந்நப்பட்ட தரப்பினர்களிடம் அந்த ஆணைக்குழு கருத்துகளையும், ஆலோசனைகளையும் கோரியிருந்தது. அவற்றை பரிசீலித்ததையடுத்து இம்முடிவை ஆணைக்குழு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget