2025 பெப்ரவரி 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment