உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால் நிலைமைகளை கையாள்வதில் அவரது விவேகமான நிதியியல் கொள்கை, நிதி அமைப்பு மேற்பார்வை மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் குளோபல் பைனான்ஸ் சஞ்சிகையானது இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு, இம்மாதம்13 முதல் 18 ஆம் திகதி வரை வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற உலக வங்கி குழுமம், சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஆம் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டது. இதன் போது தொடர் உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சந்திப்புக்களில் இக்குழு பங்கேற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், உலக வங்கி குழுமத்தின் தலைவர், சிரேஷ்ட அலுவலர்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க சந்திப்புக்களை மேற்கொண்டார்.
அத்துடன் உட்கட்டமைப்பு, வலு சக்தி மற்றும் டிஜிட்டல் ரீதியான மாற்றம், அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளர்களுடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலந்துரையாடல்களையும் நடத்தினார்
இந்த குழுவினர் ஐக்கிய அமெரிக்க வர்த்தக சம்மேளனத்துடனான கலந்துரையாடலின் போது, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை வளர்த்தல் என்பவற்றுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டினர்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மீதான முன்னேற்றம் பெற்றது. அத்துடன் இந்த சந்திப்புக்களின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச அங்கீகாரத்தை இலங்கையால் பெறமுடிந்தது.

Post a Comment