உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கொழும்பு-கட்டுநாயக்க பாதை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜான் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்குகின்றது.
இந்த முயற்சியின் மூலம் உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதையும், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கு செயற்பாடுகளை விரிவுபடுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுபோன்ற முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment