வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் விசேட விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை
அதிகாரிகள், அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் குழு
இணைந்து மஹரகமவின் நாவின்ன பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இன்று மாலை கைது
செய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment