போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி லோரா வுல்வார்ட் 169 ஓட்டங்களையும், தஸ்மின் ப்றிட்ஸ் 45 ஓட்டங்களையும், மாரிஸ்ஆன் கெப் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சொபி எக்லஸ்டோன் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்க்ளையும், லோரென் பெல் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
320 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அலிஸ் கெப்சி 50 ஓட்டங்களையும், நெட் சிவர் ப்றன்ட் 64 ஓட்டங்களையும், ஹொஜ் 34 ஓட்டங்களையும், லின்சி ஸ்மித் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மாரிஸ் ஆன் கெப் 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், நாடின் டி க்ளார்க் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Post a Comment