Ads (728x90)

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 

போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு தெரிவித்தார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget