Ads (728x90)

அனர்த்த நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அனர்த்த நிலைமை காரணமாக டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 06 இற்கான முதல் சுற்று சேர்க்கை ஜனவரி 2026 இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேர்க்கைகள் முடிந்த பின்னரே மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget