கொழும்பு மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்கு ள்ளாகியிருப்பதற்கு, எந்தவொரு திட்டமிடலோ அல்லது சட்டதிட்டங்கள் குறித்த தெளிவோ இன்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களே காரணமாகும். மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே மாவட்டமும், மக்களும் இந்த ஆபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வருடாந்தம் ஏற்படும் வெள்ளம் கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க இயலாது. அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுத் திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்படத் தேவையான நடவடிக்கைகளைத் தயார் படுத்த வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதேனும் தீர்வை வழங்குவது தொடர்பில் நாம் இப்போதே கலந்துரையாடி வருகிறோம் என்றும் பிரதமர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Post a Comment