இந்த நிதியுதவியானது சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புக்குள்ளான கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இடம்பெயர்வு முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன் கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகள், சமையல் உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளை வழங்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் மத்திய, ஊவா, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்ய 5 இலட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முகாம்களில் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சேதமடைந்த நீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பேரிடர் காலங்களில் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நோக்கில் ஜப்பான் இந்த மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment