பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவசர நடவடிக்கையாக இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.120 அடி நீளமுடைய 12 பேகள் கொண்ட இரு வழி போக்குவரத்திற்கான கனரக பாலம் திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment