Ads (728x90)

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க அருட்தந்தையொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய சம்பந்தப்பட்ட 06 பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரமான எப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

கம்பஹா குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்தினம்  கிரிந்திவிட்ட பகுதியில் இருந்து உடுகம்பொல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் கட்டளையை மீறி பயணித்ததாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த அதிகாரிகள் அதனை நிறுத்திஅதிலிருந்த 33 வயதான குறித்த அருட்தந்தையை கைது செய்த வேளையில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் தம்மை தாக்கியதாகக் கூறி குறித்த அருட்தந்தை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய சந்தேகத்தின் அடிப்படையில் கம்பஹா குற்ற விசாரணை பிரிவின் 06 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் கத்தோலிக்க பாதிரியார் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget