Ads (728x90)

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கனடாவுக்கு எந்த நோக்கமும் இல்லை என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கார்னி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஒட்டாவாவில் நடந்த லிபரல் கட்சி கூட்டத்துக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்னி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவுடனோ அல்லது சந்தை பொருளாதாரம் இல்லாத வேறு எந்த நாட்டுடனோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் உருவான சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget