உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் நம்பப்படும் லோன்லி பிளனெட் நிறுவனத்தின் இந்த அங்கீகாரம், இலங்கையின் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய உந்துசக்தியாகக் கருதப்படுகிறது.
1,340 கிலோமீற்றர் நீளமான கடற்கரையோரத்தைக் கொண்டுள்ள இலங்கை, ஆண்டு முழுவதும் சூரிய ஒளி, அலைச்சறுக்கு வசதிகள் மற்றும் கடல்சார் உயிரினங்களின் வாழ்விடங்கள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
லோன்லி பிளனெட் பரிந்துரைக்கும் இலங்கையின் சிறந்த 13 கடற்கரைகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் வருமாறு:
உனவடுன (Unawatuna): ஒட்டுமொத்தமாக மிகச்சிறந்த கடற்கரை.
தலவெல்ல (Dalawella): குடும்பங்களுடன் பொழுதைக் கழிக்கச் சிறந்த இடம்.
வெலிகம (Weligama): ஆரம்பநிலை அலைச்சறுக்கு வீரர்களுக்குச் சிறந்தது.
கபலன (Kabalana): உயர்தர உணவு அனுபவங்களுக்கு ஏற்றது.
மிரிஸ்ஸ (Mirissa): திமிங்கிலங்களைப் பார்வையிடச் சிறந்த கடற்கரை.
ஹிரிகெட்டிய (Hiriketiya): அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட கடற்கரை.
பெந்தொட்ட (Bentota): மேற்கு கடற்கரையோரத்தின் சிறந்த தலம்.
கல்குடா (Kalkudah): கிழக்கு கடற்கரையின் அமைதியான பகுதி.
அறுகம்பே (Arugam Bay): அலைச்சறுக்கு விளையாட்டுக்கு மிகச்சிறந்த இடம்.
நிலாவெளி (Nilaveli): சுனோக்லிங் (Snorkeling) மற்றும் கடலடி நீச்சலுக்குச் சிறந்தது.
கசூரினா (Casuarina): வடக்கு மாகாணத்தின் சிறந்த கடற்கரை.
கற்பிட்டி (Kalpitiya): காற்றாடி அலைச்சறுக்கு (Kitesurfing) விளையாட்டுக்கு ஏற்றது.
மாவெல்ல (Mawella): முழுமையான அமைதிக்கும் ஓய்வுக்கும் மிகச்சிறந்த இடம்.

Post a Comment