இந்த புதிய வேதன உயர்வு 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதந்த குறைந்தபட்ச வேதனம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த தெரிவித்துள்ளார்.
மேலும் நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வேதன உயர்வு 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வருகிறது.

Post a Comment