விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, வருகை முனையத்தில் எவ்வித அறிவித்தலும் இன்றி வெளியேற முயன்ற போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாத்தாண்டிய மற்றும் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29, 32, 37 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்கள் கொண்டு வந்த 05 பயணப் பொதிகளைப் பரிசோதித்த போது, சுமார் 13 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 10 பொதிகளில் அடைக்கப்பட்ட 10 கிலோகிராம் 394 கிராம் 'குஷ்' போதைப்பொருளும், 18 பொதிகளில் அடைக்கப்பட்ட 01 கிலோகிராம் 912 கிராம் 'ஹஷிஷ்' போதைப்பொருளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

Post a Comment