இந்த பல நாள் மீன்பிடி படகிலிருந்து 11 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராமுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் 172 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகு நேற்று காலை 6:00 மணியளவில் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்ட வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இப்படகில் இருந்த ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து 200 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment