Ads (728x90)

நெடுந்தீவில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நெடுந்தீவுக்கான கண்காணிப்பு விஜயத்தின்போது பார்வையிட்டுள்ளார். 

ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்கள், தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மேலும் நெடுந்தீவில் செயல்பட்டு வரும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா துறையினர் ஆகியோரையும் சந்தித்த அமைச்சர், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தார். 

உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்தரையாடியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாகச் சவால்களை ஆராய்ந்ததுடன், பணியாளர்களுடனும் கலந்துரையாடி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget