கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் போலியான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் அரசாங்கம் ஸ்திரமாகவுள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. பாட உள்ளடக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாம் தரத்துக்கு 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 6ஆம் தரத்துக்கான சீர்திருத்தங்கள் சில மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையில் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் போலி செய்திகளையும் மக்களுக்கு உணர்த்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Post a Comment