Ads (728x90)

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 22 அம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்தநிலையில் 272 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி இந்த தொடரில் 1:0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget