முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்த நிலம் வழங்கப்பட்டதோடு, குத்தகை உடன்படிக்கையின் நிபந்தனைகளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீறியதையடுத்து, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்து காணியை மீண்டும் கையகப்படுத்தியுள்ளது.
சுமார் 5 ஏக்கர் (2.0234 ஹெக்டேயர்) பரப்பளவைக் கொண்ட இந்த காணி 2023 மே 24 ஆம் திகதி 30 வருட கால குத்தகை அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
தியலும நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களை எளிதில் சென்றடையக்கூடிய அதிக சுற்றுலா ஈர்ப்புமிக்க ஒரு பகுதியிலேயே இந்தக் காணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment