பிக்பாஸ் வீட்டிற்குள் பல்லக்கில் இருந்து இறங்கிய உடன் அனைவரும் அவரை வரவேற்றனர். காயத்திரி, ஓவியா உள்ளிட்டவர்களைக் கட்டியணைத்து வரவேற்றனர். நடிகை பிக்பாஸ் வீட்டில் நுழையும்போதே தப்பு செய்துவிட்டனோ என்ற கேள்வியுடன் நுழைந்தார். நடிகை பிந்து மாதவியிடம் பிக்பாஸ் ஒரு டாஸ்கை கூறுகிறார். அதன்பிறகு ஜூலியுடன் சேர்ந்து ஓவியா நடனம் ஆடுவதுபோல் காட்டப்பட்டது அதில் ஜூலி தடுமாறி கீழே விழுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்த நடிகை பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் சுதாகரித்து கொள்வாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment