பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் பல செய்திகள் வெளிவருகின்றன. இதில் கஞ்சாகருப்பு நடிகர் ஷக்தியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அருகில் ஆரார் இருக்கிறார். அப்போது அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தை பற்றி பேசிம்போது, வாலி படம் முதல்நாள் காட்சி பார்த்த சிலர் படம் ப்ளாப் என்று கூறியதால் அதன் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா டவர் மீது ஏறி இப்படம் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறினாராம்.
தொடர்ந்து ஷக்தி கூறுகையில், லயோலா கல்லூரி மாணவரான எஸ்.ஜே சூர்யா, பஸ்சில் தான் செல்வார். வாலி படப்பிடிப்பின் போது அஜித் பைக் வாங்கிக்கொடுத்தார், படம் முடியும் போது அதாவது வெளிவருவதற்கு முன்னாலே கார் வாங்கித்தந்தார், அஜித்துக்கு அவரின் மீது அப்படியொரு நம்பிக்கை வைத்திருந்தார் என்று கூறினார். இவ்வாறு அஜித்தின் புகழ்ந்து பேசி, பழையதை நினைவுக் கூர்ந்தார் நடிகர் ஷக்தி.

Post a Comment