தற்போதைக்கு அரசியல் களத்தை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் ஹாட். இதை பெரும்பாலானோர் கேலி செய்தாலும் யாராலும் பார்க்காமல் இருப்பதில்லை. இதுவும் அந்த நிகழ்ச்சியின் ஒருவிதமான வெற்றிதான். அப்படி என்னதான் நடக்கிறது? அதில் கலந்துக்கொண்ட நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள்? என அனைவரும் ஆர்வத்திடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு டீம் பிக் பாஸ் நிகழ்ச்சிபோன்று ‘மொட்ட பாஸ்' என்ற சீரிஸை விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறி மாதிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஜெய், சிவா, நிதின் சத்யா மற்றும் அஜய்ராஜ் தோன்றும் இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நட்சத்திரங்களை கேலி செய்து உள்ளனர்.

Post a Comment