Ads (728x90)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மையில் ரியாலிட்டி ஷோ அல்ல, அது ஒரு செட்டப் தான் என்றும் பலரும் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய விதியே இதில் கலந்து கொண்டவர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான்

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகரின் மனைவி ஒருவர் அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, என்வீட்டுக்காரர் என்கிட்ட தினமும் போனில் பேசுவாரு? என்று கூறியதாக அவ்ருடைய தோழி, ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிறிது நேரத்தில் அந்த பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார்
 
ஆனால் அதற்குள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த பலர் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை கலாய்த்து வரும் நெட்டிசன்களுக்கும் மிமி கிரியேட்டர்களுக்கு இந்த பதிவு அல்வா சாப்பிடுவது போல் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget