Ads (728x90)

பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பஃபக்ஷன் அறையில் இன்று ஓவியா மற்றும் ஜூலி வரவழைக்கப்பட்டு இந்த வீட்டில் கிடைத்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது..முதலில் ஓவியா கூறியபோது, 'இந்த வீட்டில் எனக்கு உண்மையாக மனம் விட்டு பேச ஆளில்லை, ஆனால் இதையும் ஒரு அனுபவமாக எண்ணி நான் தாங்கி கொள்வேன்' என்று கூறினார். அதற்கு மேல் பேச முடியாமல் அவரது கண்களில் கண்ணீர் கொட்டியது
அதன் பின்னர் பேச வந்த ஜூலி, 'நான் ஒரு சில காரணங்களால் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் அந்த பொய், வேண்டுமென்றே சொன்ன பொய் கிடையாது. நான் பொய் சொல்பவளும் கிடையாது' என்று கூறினார்.
மேலும் இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஓவியா, ஜூலி, ஆரவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget