Ads (728x90)

ஓவியா அப்படி சொன்னாக்கா, அதுக்கு முன்னால ஒரு 5 நொடிக்கு முன்னால அவ சொன்னாக்கா, என்று கதறி அழுது வழக்கம்போல் தனது பொய் நாடகத்தை அரங்கேற்றியவர் ஜூலி என்பது அனைவரும் அறிந்ததே. 

ஓவியா குற்றமற்றவர், அவர் யாரையும் புறம் கூறவில்லை என்பதை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட பின்னரும் ஜூலி வேண்டுமென்றே அந்த வீடியோ இருக்குது என்று கூறி அனைவரையும் கடுப்பாக்கினார். கமல்ஹாசனே அப்படி ஒரு காட்சியுடன் கூடிய வீடியோ இல்லை என்று கூறியும் கமல்ஹாசனையும் விஜய் டிவியையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பொய்யை கூறிக்கொண்டே இருந்தார் ஜூலி
 
இந்த நேரத்தில் ஜூலி கேட்ட அந்த 5 வினாடி என்ன 15 வினாடி வீடியோவை விஜய் டிவி இன்று வெளியிட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே அந்த 15 வினாடியில் ஜூலிதான் பேசி கொண்டிருந்தாரே தவிர, ஓவியா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை ஜூலி பொய்க்காரி என்பது உறுதியாகியுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget