Ads (728x90)

சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாளரான ஜெகன் பல சமயங்களில் மோசமான டபுள் மீனிங் வசனங்களை பேசி அனைவரையும் முகம் சுளிக்க வைப்பார்.
இதேபோல், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டுடியோ திறப்பு விழாவை ஜெகன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் சில நடிகர்களும் கலந்துகொண்டனர்.
ஸ்டுடியோ உரிமையாளர் ஒரு நடைக்கடையும் வைத்துள்ளார். அப்போது பேசிய அவர் நகைக்கடை ஒன்றின் திறப்புவிழாவின் போது அனுஷ்காவை அழைத்திருந்தோம். 
அனுஷ்கா வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் வந்துவிட்டோம். அங்கே, எங்களை ஒருவர் கூட புகைப்படம் எடுக்கவில்லை. ஆனால், அனுஷ்கா வந்ததும் அனைவரும் புகைப்படம் எடுத்தனர் என்று கூறினார்.
இதற்கு ஜெகன், சற்றும் சிந்திக்காமல் அனுஷ்கா ட்ரஸ் ரொம்ப கம்மியா போட்டு வந்திருப்பாங்க அதான் அவங்களை எல்லோரும் போட்டோ எடுத்து இருப்பாங்க என கமெண்ட் அடித்தார்.
ஜெகனின் இந்த கமெண்ட் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அனுஷ்கா படங்களில் எப்படி உடை அணிந்து நடித்தாலும், விழாக்களில் மிகவும் நாகரிகமாகவே உடை அணிந்து வருவார். எனவே, இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget