Ads (728x90)

எம்.வி.ஓசன் லேடி கப்­ப­லில் இலங்­கைத் தமிழ் அக­தி­களை கன­டா­வுக்கு ஏற்றி வந்­தார்­கள் என்று குற்­றம் சாட்­டப்­பட்ட நான்கு தமி­ழர்­க­ளும், குற்­ற­வா­ளி­கள் இல்லை என்று பிரிட்­டிஷ் கொலம்­பிய உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.
இந்த வழக்­கில் நேற்று முன் தினம் தீர்ப்­ப­ளித்த நீதி­பதி ஆர்னே சில்­வர்­மன், இந்­தக் கடத்­தல் நட­வ­டிக்கை ஒருங்­கி­ணைந்த குற்­றம் என்­ப­தற்­கான சாட்­சி­யங்­கள் உள்­ள­போ­தி­லும், குற்­றம்­சாட்­டப்­பட்ட நால்­வ­ரும் எந்­தக் குற்­றங்­க­ளி­லும் தொடர்­பு­பட்­டி­ருந்­தார்­கள் என்று சந்­தே­கத்­துக்கு அப்­பாற்­பட்ட வகை­யில் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறி­யுள்­ளார்.
பிரான்­சிஸ் அந்­தோ­னி­முத்து அப்­பு­லோ­னப்பு, கமல்­ராஜ் கந்­த­சாமி, ஜெயச்­சந்­தி­ரன் கன­க­ராஜ், விக்­ன­ராஜா தேவ­ராஜ் ஆகிய நால்­வ­ருமே குற்­றச்­சாட்­டு­க­ளில் இருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.
2009 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் ஓசன் லேடி கப்­ப­லில் இவர்­கள் கன­டா­வில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர்.
நீதி­பதி தீர்ப்பை அறி­வித்­த­தும் இவர்­கள் புன்­ன­கைத்தபடி தமது சட்­ட­வா­ளர்­க­ளு­டன் கைகு­லுக்­கிக் கொண்­ட­னர்.
கன­டா­வில் அடைக்­க­லம் தேடும் அக­தி­களை இலாப நோக்­கில் கடத்­து­வ­தற்கு இவர்­கள் பொறுப்­பாக இருந்­த­னர் என்று அர­ச­ த­ரப்புச் சட்­ட­வா­ளர் வாதிட்­டி­ருந்­தார்.
ஆனால் இந்­தக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்று நீதிபதி சில்வர்மன் தெரிவித்தார்.
ஓசன் லேடி கப்பல் 79 தமிழர்க ளுடன் 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்தமை குறிப்பி டத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget