Ads (728x90)

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும்.
இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது.
அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget