Ads (728x90)

சிந்தனையில் வளம் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!
தற்போது கேது 6ம் இடமான மகரத்திற்கு வருவதால் பின்தங்கிய நிலை அடியோடு மறையும்.  பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். எப்போதும் புன்னகை சிந்தும் முகத்துடன் விளங்குவீர்கள். ராசியில் இருக்கும் ராகு இடம் மாறி 12-ம் இடமான கடகத்திற்கு செல்வதால் திடீர் செலவு, தூரதேச பயணம் செல்ல நேரிடும். தற்போது 4ல் இருக்கும் சனியால்
குடும்பத்தில் வீண் விரோதம் ஏற்படலாம். டிச.18ல்  5ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம்.

குருபகவான்  ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் இருப்பதால் பணவரவு கூடும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. ஆக.31-க்கு பிறகு 3-ம் இடத்திற்கு செல்வது சாதகமானது அல்ல. இருந்தாலும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும்.  2018 பிப்.13-ல்  4-ம் இடத்திற்கு மாறுகிறார். அப்போதும்  நற்பலன் உண்டாகாது.

கால வாரியாக விரிவான பலனை காணலாம். 2017 ஜூலை –  டிசம்பர் பொருளாதார நிலை சிறக்கும். வாழ்வில் குறுக்கிடும்  பிரச்னைகளை  எளிதில் முறியடிப்பீர்கள். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆக. 31- க்கு பிறகு தொழிலில் அதிக முதலீடு போட வேண்டாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். விருப்பமான இடமாற்றம் முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர்.
சிலர் விடாமுயற்சியுடன் புதிய சொத்து வாங்குவர்.  வழக்கு விவகாரத்தில் முடிவு
சாதகமாக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  மருத்துவச் செலவு குறையும்.

2018 ஜனவரி– 2019 பிப்ரவரி பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். தொழில் விஷயமாக தூரதேச பயணம் செல்ல நேரிடும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத் தேவை  அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்த சச்சரவு மறையும். 

2018 பிப். 13-க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். முக்கிய பொறுப்பை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அரசின் வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல வளர்ச்சி பெறும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். வழக்கமான  சம்பள உயர்வுக்கு தடை இருக்காது.

கலைஞர்கள் விடாமுயற்சி இருந்தால் புதிய ஒப்பந்தம் பெறலாம்.  சிலருக்கு  எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல் வாதிகள் முன்னேற்ற பலன் பெறுவர்.

மாணவர்கள் படிப்புக்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். வழக்கு விவகாரத்தில் முடிவு  சிறப்பாக இருக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து, கைவிட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் விரும்பிய ஆடம்பர பொருள் வாங்குவர். புத்தாடை, ஆபரணம் சேரும் யோகமுண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம்.

பரிகாரம்: சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை கார்த்திகை விரதமிருந்து முருகனுக்கு தீபம் ஞாயிறன்று காலையில் சூரியவழிபாடு.



நல்லவர்களை மதிப்புடன் நடத்தும் கன்னி ராசி அன்பர்களே!
ராகு, கேது பெயர்ச்சியால்  ராஜயோக வாழ்வு அமையும்.  ராசிக்கு 12ம் இடமான சிம்மத்தில் இருந்து 11ம் இடமான கடகத்திற்கு செல்வது சிறப்பு. பொருளாதாரம் பன்மடங்கு உயரும். பெண்களால் நன்மை கிடைக்கும். கேது  6ம் இடமான கும்பத்தில் இருந்து 5ம் இடமான  மகரத்திற்கு வருவதால் அரசு வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம். சனி பகவான் ராசிக்கு3ல் இருப்பதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.  டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து 4ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் குடும்பத்தில் பகை, பிரிவு ஏற்படுத்துவார்.

குரு பகவான் தற்போது  ராசியில் இருப்பது சிறப்பு அல்ல என்றாலும் அவரது பார்வை பலத்தால் நன்மை உண்டாகும். ஆக.31க்குப் பின்  2ம் இடத்திற்கு செல்வதால் சுப பலன் அதிகரிக்கும். 2018 பிப். 13ல்  3ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை குறையும். கால வாரியாக விரிவான பலனை காணலாம்.2017 ஜூலை – டிசம்பர் கையில் பணப்புழக்கம் இருக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். ஆக. 31க்கு பிறகு குருபகவானால் நற்பலன் அதிகரிக்கும். பெண்களால் வாழ்வு மேன்மை பெறும். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருள் குறைவின்றி கிடைக்கும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு கட்ட யோகம் உண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

தொழில், வியாபார வளர்ச்சியால் அமோக லாபம் கிடைக்கும்.  புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். விரிவாக்கப் பணியிலும் ஈடுபட வாய்ப்புண்டு.

பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமை இருந்தாலும்  அதற்கான பலன் கிடைக்கும்.  கலைஞர்கள்  சுமாரான நிலையில் இருப்பர். முயற்சிகளில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு ஆக. 31க்கு பிறகு மறையும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வை பலத்தால்

போட்டியில் வெற்றி பெற வாய்ப்புண்டு. விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு உண்டாகும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். 2018 ஜனவரி– 2019 பிப்ரவரி ராகுவால் பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும்.

ஆடம்பர வசதி பெருகும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். உறவினர்களால் உதவி உண்டு. தடைபட்ட திருமணம் நடந்தேறும்.  சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவர். 2018 பிப். 13க்கு பிறகு முயற்சியில் தடை குறுக்கிடும். குரு பகவான் 2018 ஏப். 9 முதல் 2018 செப்.3 வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அவரால் நன்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளியிடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் உதவி கிடைப்பது அரிது.  திருட்டு பயமும் ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின்ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  2018 பிப். 13க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.  கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்களிடத்தில் செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு தேக்கநிலை மறையும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.  விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  அதிக மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: வெள்ளி ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு வியாழன்று குருபகவானுக்கு அர்ச்சனை பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய்தீபம்

Post a Comment

Recent News

Recent Posts Widget