நாட்டை ஆக்கிரமித்துள்ள உயிர்க்கொல்லி நோயான டெங்கினால் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கின்றது.
அதேவேளை, கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்த தொற்றுநோய் பிரிவின் புள்ளிவிபர அறிக்கையின் படி, ஒரு இலட்சத்து ஆயிரத்து 698 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஒரு வாரத்தில் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த உயிர்க்கொல்லி நோயான டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் இதுவரையில், 3 ஆயிரத்து 688 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment