Ads (728x90)

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தின் மூலம் நாட்டிற்கு நன்மை கிடைக்கப்போவதில்லை. நட்டமே ஏற்படப்போகின்றது. அதனை மறைப்பதற்காகவே இலங்கை மத்திய வங்கி பிணை முறிகள் விற்பனையில் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டோம் என்ற நாடகமொன்று அரங்கேற்றப்படுவதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டைதுறை முகத்தில் சீனா முதலீடுகளை செய்வதற்கு நாம் என்றும் எதிர்க்கப்போவதில்லை எனத் தெரிவித்தவர் அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கையை முழுமைய எதிர்ப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அரசாங்க - தனியார் கூட்டு வர்த்தகமாக செயற்படுத்துவதற்கான உடன்படிக்கை நேற்று துறைமுக அதிகார சபைக்கும், சீனா மேர்சன்ட் ஹோல்;டிங் நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget