இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் எடுத்தது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (144), ரகானே (39) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரகானே அரை சதம்:
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. புஜாரா 153 ரன்கள் எடுத்தார். ரகானே (57) அரை சதம் கடந்தார். ஹெராத் ‘சுழலில்’ சகா (16) சிக்கினார். அஷ்வின் 47 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 15, ஷமி 30 ரன்களில் ‘பெவிலியன்’ திரும்பினர். அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக நுவன் பிரதீப் 6 விக்கெட் வீழ்த்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment