Ads (728x90)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பேக்கரும்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இது 16.5 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. நினைவகத்தின் முகப்பில் கலாமின் 6 அடி உயர முழு உருவ வெண்கல சிலை, 'அக்னி' ஏவுகணை, செயற்கைகோள் மாதிரிகள், கலாமின் 700க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 95 ஓவியங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (ஜூலை 27), தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து நினைவகத்தை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார். தொடர்ந்து, கலாம் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலாம் குடும்பத்தினரையும் சந்தித்தார்.

விழாவில், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்ராதாகிருஷ்ணன், பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை பங்கேற்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget