மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக மகிந்த அணி தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூல அறிவித்தல் ஒன்றையும் அது அனுப்பியுள்ளது.
மகிந்த அணி சார்பில் முன்னாள் அயலுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வாவின் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், இந்த வருடத்தின் செப்ரெம்பர், – ஒக்ரோபர் மாதங்களில் பதவிக்காலம் நிறைவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் உடனடியாக நடத்தப்படவேண்டுமெனவும், எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்தத் தேர்தல்கள் தாமதிக்கப்பட்டால் மேலதிக அறிவித்தல்கள் எதுவுமின்றி தாங்கள் நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தொடரவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தப்போவதாகக் காரணங்காட்டிப் பதவிக்காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களையும் அரசு ஒத்திவைத்திருக்கும் நிலையில், மகிந்த நீதிமன்றத்தை நாடுவது முக்கிய திருப்பமாகுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment