Ads (728x90)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜூலியை ஒரு அறை விடுமாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கலந்து கொண்டார். இதில் தொடக்கத்தில் ஜூலிக்கு இருந்த ஆதரவு தற்போது இல்லை. ஓவியாவிற்கு எதிராக அவர் நடந்து கொள்ளும் விதம் பலருக்கும் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே ஜூலியின் நடவடிக்கை பற்றி  தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “ஜூலியின் நடிப்பிற்கு ஆஸ்கார் கொடுக்கலாம்” என கிண்டலடித்திருந்தார்.இந்நிலையில், சமீபத்தில் “ஓவியா.. அடிமா நீ ஜூலிய”  எனக் குறிப்பிட்டு, ஓவியா ஆர்மி என்கிற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
 
அதாவது, ஜூலிக்கு ஒரு அறை விடு என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget