Ads (728x90)

கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது என்று கூறப்பட்டது.
வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget