ஆப்கான் நாட்டின் தேசிய விமான சேவையைச் சேர்ந்த பெண் வானோடி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார். ஒரேயொரு இயந்திரத்தைப் பூட்டிய விமானத்தின் மூலமே இவர் இந்த உலகம் சுற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இவர் திடீரென்று கட்டு நாயக்க விமான நிலையத்தில் தனது விமானத்தைத் தறையிறங்கியுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இவரது தரையிறக்கப் பட்டியலில் இலங்கை உள்ளடங்காதபோதிலும் வானில் நிலவிவரும் சீரற்ற கால நிலையே இந்த தரையிறக்கத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. இதுவரை பதினெட்டு நாடுகளில் தரையிறங்கியுள்ள இவர், Beechcraft Bonanza A36 என்ற விமானம் மூலமே உலகைச் சுற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
விமானம் ஓட்டும் சேவையில் பெண்களும் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆப்கானைச் சேர்ந்த இவர் அமெரிக்க நாட்டில் விமானக் கற்கை நெறியை முடித்துள்ளார்.
அவரை வரவேற்கும் நிகழ்வொன்று கட்டு நாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment