சட்ட மருத்துவ அதிகாரியின் சாட்சியத்தைப் பெற தீர்ப்பாயம் நேற்று அனுமதியளித்தது.
எதிரிகள் தரப்பில் சாட்சியமாக சட்ட மருத்துவ அதிகாரியை தீர்ப்பாயத்துக்கு அழைப்பதற்கு 5ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி விண்ணப்பம் செய்தார்.
அதனை வழக்கு தொடுனர் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது
“சட்ட மருத்துவ அதிகாரியின் சாட்சியப் பதிவுகள் முடிவடைந்த பின்னர் தான் ஜின்டேக் நிறுவன விஞ்ஞானியின் சாட்சி பதிவு இடம்பெற்றது. அதில் சில மேலதிக தகவல்களை சட்ட மருத்துவ அதிகாரியிடம் பெற வேண்டியுள்ளன.
“சட்ட மருத்துவ அதிகாரியின் சாட்சியப் பதிவுகள் முடிவடைந்த பின்னர் தான் ஜின்டேக் நிறுவன விஞ்ஞானியின் சாட்சி பதிவு இடம்பெற்றது. அதில் சில மேலதிக தகவல்களை சட்ட மருத்துவ அதிகாரியிடம் பெற வேண்டியுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. மாணவி நகத்தால் கீறியுள்ளார். அதில் சில தசைகள் இருந்தமையால் அவை அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அவ்வாறு எனில் இந்த எதிரிகள் உடலில் அந்தக் காலப் பகுதியில் நகக் கீறல்கள் அடையாளம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் உடலில் அவ்வாறான காயங்கள் இருந்ததாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் இல்லை. அவ்வாறு எனில் நக கீறல் காயங்கள் உடைய ஒருவர் வெளியில் உள்ளார்.
இவ்வாறாக சில மேலதிக தகவல்களை சட்ட மருத்துவ அதிகாரியிடம் பெற வேண்டிய தேவையுள்ளதால் அவரை மீண்டும் சாட்சியமாக அழைக்க வேண்டும்” என்று 5ஆம் எதிரியின் சட்டத்தரணி தீர்ப்பாயத்திடம் கோரினார். அதற்கு தீர்ப்பாயம் அனுமதியளித்து சட்ட மருத்துவ அதிகாரிக்கு அழைப்புக் கட்டளை அனுப்ப உத்தரவிட்டது.

Post a Comment